சந்திரபாபு நாயுடுவை பழிவாங்க ஜெகன்மோகன் ரெட்டியுடன் கைகோர்க்கும் மோடி!
கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைந்தபோது அந்த ஆட்சிக்கு பெரும் ஆதரவு கொடுத்த கூட்டணி கட்சிகளில் ஒன்று சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி. ஆனால் அந்த கட்சி ஓருசில ஆண்டுகள் மத்திய அமைச்சர்கள் என்ற பதவிச்சுகத்தை அனுபவித்துவிட்டு பின்னர் திடீரென கூட்டணியில் இருந்து விலகியதோடு, பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணி அமைக்கவும் முயற்சி செய்தது. ஆனால் அது எடுபடாமல் போகவே காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்தது
இதனால் கடும் அதிருப்தி அடைந்த மோடி, இரண்டாவது முறையாக பிரதமர் ஆனவுடன் தனது முதல் டார்கெட்டாக சந்திரபாபு நாயுடுவை குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கேற்றார்போல் சந்திரபாபு நாயுடு தற்போது பதவியிழந்து பவர் இல்லாமல் இருப்பதும் செளகரியமாக உள்ளது
இந்த நிலையில் ஆந்திராவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவில் சிபிஐ விசாரணை நடத்த அனுமதிக்கும் வகையில் அரசாணையை திருத்தியுள்ளார். கடந்த ஆட்சியில் ஆந்திராவில் விசாரணை மற்றும் சோதனைகளை நடத்துவதற்காக சிபிஐக்கு அளிக்கப்பட்ட "பொது ஒப்புதல்" திரும்பப் பெறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சிபிஐ அமைப்பை அனுமதித்துள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி.
இந்த அனுமதியை வைத்து பிரதமர் மோடி, சந்திரபாபு நாயுடுவை பழிவாங்கும் என்றும், வெகுவிரைவில் சந்திரபாபு நாயுடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களை சிபிஐ அணுகும் என்றும் கூறப்படுகிறது