திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 6 ஜூன் 2019 (09:14 IST)

ஏன், எதுக்குனே தெரியல? அப்படி நடந்தா சந்தோசம்தான்: தமிழிசை!!

பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முதல்வர் எதுக்காக டிவிட் போட்டார் ஏன் நீக்கினார் என தெரியவில்லை என தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழி கொள்ளை நடைமுறையில் உள்ளது. சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த கல்வி கொள்கையில் ஹிந்தியை அனைத்து மாநில மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.  
 
இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்த நிலையில் ஹிந்தியை கட்டாயமாக பயிற்றுவிக்க வேண்டிய அவசியம் இல்லை. விருப்பத்தின் அடிப்படையில் 3 வது மொழியை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டது. 
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்றி காலை பிரதமர் மோடிக்கு டிவிட்டர் மூலம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதில், பிற மாநிலங்களில் தமிழை 3 வது மொழியாக பயிற்றுவிக்க வேண்டும். பிற மாநிலங்களில் விருப்ப மொழியாக தமிழை அறிவித்தால் தொன்மையான மொழிக்கு செய்யும் சேவையாகும் என குறிப்பிட்டிருந்தார். 
 
ஆனால், அந்த டிவிட்டை அவர் பதிவிட்டதும் முதல்வர் மும்மொழி கொள்கையை ஆதரதிக்கிறார் என விமரச்னங்கல் எழுந்தன. விமர்சனங்கள் அதிகரிக்கவே அந்த டிவிட்டை நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில் இது குறித்து தமிழிசையிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது, 
முதலவர் எடப்பாடி பழனிச்சாமி எதற்காக டிவிட் செய்தார், ஏன் அதை நீக்கினார் என தெரியவில்லை. தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. முதல்வரின் டிவிட் மட்டும் அல்ல பிரதமரும் இது பற்றி ஏற்கனவே கூறியுள்ளார். 
 
வடமொழியை சார்ந்தவர்கள் தென்மொழியை கற்க வேண்டும், தென்மொழியை சார்ந்தவர்கள் வடமொழியை கற்க வேண்டுமென... மொழிப்பறிமாற்றம் இருக்க வேண்டும். அது தமிழ் மொழியாக இருந்தால் மகிழ்ச்சிதான் என தெரிவித்துள்ளார்.