புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 5 ஜூன் 2019 (16:07 IST)

தமிழ் 3வது மொழி: மோடிக்கு போட்ட டிவிட்டை நீக்கிய எடப்பாடி!!

தமிழை மற்ற மாநிலங்களின் 3வது மொழியாக்க வேண்டும் என கூறி பிரதமர் மோடிக்கு போட்ட டிவிட்டை முதல்வர் நீக்கியுள்ளார். 
 
தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழி கொள்ளை நடைமுறையில் உள்ளது. சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த கல்வி கொள்கையில் ஹிந்தியை அனைத்து மாநில மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 
 
இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்த நிலையில் ஹிந்தியை கட்டாயமாக பயிற்றுவிக்க வேண்டிய அவசியம் இல்லை. விருப்பத்தின் அடிப்படையில் 3 வது மொழியை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டது. 
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று காலை பிரமர் மோடிக்கு டிவிட்டர் மூலம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதில், பிற மாநிலங்களில் தமிழை 3 வது மொழியாக பயிற்றுவிக்க வேண்டும். பிற மாநிலங்களில் விருப்ப மொழியாக தமிழை அறிவித்தால் தொன்மையான மொழிக்கு செய்யும் சேவையாகும் என குறிப்பிட்டிருந்தார். 
 
ஆனால், தற்போது மோடிக்கு கோரிக்கையாக வைத்த அந்த டிவிட்டை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார்.