ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 ஜனவரி 2023 (08:56 IST)

பிரதமர் மோடி குறித்த சர்ச்சையான ஆவணப்படம்! – தட்டி தூக்கிய யூட்யூப்!

பிரதமர் மோடி குறித்து பிபிசி தயாரித்த ஆவணப்படம் ஒன்று சர்ச்சையான நிலையில் யூட்யூபிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

கடந்த 2002ம் ஆண்டில் குஜராத்தில் நடந்த மதக்கலவரம் குறித்து பிபிசி ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது. அந்த கலவர காலகட்டத்தில் குஜராத்தின் முதலமைச்சராக இருந்தவர் நரேந்திர மோடி. எனவே அந்த ஆவணப்படம் “இந்தியா: மோடிக்கான கேள்விகள்” என்ற பெயரில் வெளியானது.

ஆனால் இந்த ஆவணப்படத்திற்கு பாஜக வட்டாரத்தில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து வெளியிறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்‌ஷி பேசுகையில், இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரத்திற்காகவே இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டது போல உள்ளதாகவும், ஒரு சார்பாக காலணியாதிக்க மனோபாவத்துடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப முடியாது என கூறியிருந்த நிலையில் யூட்யூபிலிருந்து அந்த ஆவணப்படம் நீக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K