வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 15 ஜனவரி 2023 (13:59 IST)

8 -வது 'வந்தேபாரத் ரயில்சேவையை' தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

vande bharath
இந்தியாவில் 8 வது வந்தேபாரத் ரயில்சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர்  மோடி.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் முக்கிய பகுதிகளில் வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 7 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்ட வரும் நிலையில்  செகந்திராபாத்  மற்றும் விசாகப்பட்டினம் இடையே அதிவேக வந்தே பாரத் விரைவு ரயிலை இன்று காலையில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த ரயில், ஆந்திரா பிரதேசம் மற்றும் தெலுங்கானா  மாநிலங்களை இணைக்கும் 700 கிமீட்டர் சேவை என கூறப்படுகிறது.