வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 16 ஜனவரி 2023 (15:00 IST)

திருவள்ளுவர் தினம்.. தமிழில் டுவிட் செய்த பிரதமர் மோடி!

திருவள்ளுவர் தினம்.. தமிழில் டுவிட் செய்த பிரதமர் மோடி!
 
தமிழக முழுவதும் இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி தமிழில் திருவள்ளுவர் தின வாழ்த்துக்களை டுவிட் செய்துள்ளார். 
 
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் நிலையில் இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல பிரபலங்கள் திருவள்ளுவர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்
 
அந்த வகையில் இந்திய பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் தின வாழ்த்துக்களை தமிழில் பதிவு செய்துள்ளார்.அவர் அதில் கூறி இருப்பதாவது: அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன், அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன என்று பதிவு செய்துள்ளார்.
 
 ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக கவர்னர் ரவி உள்பட பலரும் தங்களது டுவிட்டர் பக்கங்களில் திருவள்ளுவர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran