தன்னை தாக்கிய சிறுத்தையை கயிற்றில் கட்டி பைக்கில் கொண்டு வந்த இளைஞர்.. கர்நாடகாவில் பரபரப்பு..!
தன்னை தாக்கிய சிறுத்தையை பிடித்து கயிற்றால் கட்டி பைக்கில் ஊருக்கு கொண்டு வந்த இளைஞர் ஒருவரால் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் என்ற மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சிறுத்தை அவரை தாக்கியது. இதனால் காயமடைந்த அவர் அதிர்ச்சி அடைந்தாலும் தன்னை தாக்கிய சிறுத்தையுடன் அவர் மல்லுக்கட்டி சிறுத்தையின் கால்களை கட்டினார்
அதன் பிறகு அந்த சிறுத்தையை தனது பைக்கில் வைத்து தன்னுடைய சொந்த கிராமத்திற்கு தூக்கி வந்ததை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து உடனடியாக அந்த கிராமத்து மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்து சிறுத்தையை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
மேலும் அந்த இளைஞருக்கு முதலுதவி சிகிச்சையையும் கிராம மக்கள் அளித்தனர். இந்த நிலையில் சிறுத்தையை மீட்ட கால்நடை வனத்துறையினர் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பின்னர் மீண்டும் வனப்பகுதியில் கொண்டு போய் விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Mahendran