வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 17 ஜூன் 2023 (13:25 IST)

நடிகர் விஜய்யை பாராட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி

vijay- ambethkar
சென்னையில் இன்று விஜய் கல்வி விருது விழா நடைபெற்ற நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக நடிகர் விஜய்யின் பேச்சை பாராட்டியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னதாக நடிகர் விஜய் 'விஜய் மக்கள் இயக்க' நிர்வாகிகளுக்கு ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் இருந்து முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் சுமார் 1500 பேர் மற்றும் அவர்களுடன் பெற்றோர்கள் என மொத்தம் 6000 பேருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

கல்வி உதவி தொகை, சான்றிதழ் ஆகியவை சேர்த்து மொத்தம் இரண்டு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று    நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  நடிகர் விஜய் பேசியதாவது:

‘’நீங்கள் தான் நாளைய தலைமுறை வாக்காளர்கள் என்றும் அடுத்து நல்ல தலைவர்களை தேர்ந்தெடுகள் என்றும் நம் கையை வைத்து நம்மையே குத்துவார்கள், காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவதை தான் சொல்கிறேன் உங்கள் பெற்றோரிடம் சொல்லுங்கள் காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போட வேண்டாம் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களை சந்தித்தது தமக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறி அவர் காமராஜர் அம்பேத்கார் பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து படிக்க வேண்டும்'' என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதுபற்றி விடுதலை சிறுத்தலைகள் கட்சி தங்கள் டுவிட்டர் பக்கத்தில்,'' நடிகர் விஜய் அவர்களின்  கல்வி தொடர்பான செயல்பாடுகள் நம்பிக்கையை தருகிறது.மாணவ- மாணவிகளுக்கு பெரும் ஊக்கத்தை தரும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.அதுவும் திரு. விஜய்  அவர்கள் பேசும் போது, புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் போன்ற  சமூகநீதித் தலைவர்களை படியுங்கள் என வழிகாட்டி இருப்பது பாராட்டுக்குரியது. வாழ்த்துகள்…'' என்று தெரிவித்துள்ளது.