’பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என வாட்ஸ் ஆப் குருப்பிற்கு பெயர் வைத்த வாலிபர் கைது

Last Updated: புதன், 31 ஜூலை 2019 (17:35 IST)
பீகாரில் வாட்ஸ் ஆப் குரூப்பிற்கு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என பெயர் வைத்த வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளது.

பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தைச் சேர்ந்த சதாம் குரேஷி என்ற வாலிபர் வாட்ஸ் ஆப்-ல் ஒரு குரூப்பை உருவாக்கியுள்ளார். அந்த குரூப்புக்கு “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என பெயர் வைத்துள்ளார்.

இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர், சதாம் வாட்ஸ் ஆப் குரூப்பிற்கு ”பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என பெயர் வைத்துள்ளது குறித்து போலீஸில் புகார் அளித்துள்ளனர். அப்புகாரின் பேரில் சதாமை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க சதி செய்ததாக சதாம் மீது குற்றம்சாட்டி கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளதாக கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :