செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 31 ஜூலை 2019 (11:16 IST)

காஃபி டே நிறுவனருக்கு இவ்வளவு கோடி கடன் இருந்ததா??

காஃபி டே நிறுவனரும் பிரபல தொழிலதிபருமான சித்தார்த்தா, கடந்த திங்களன்று காணாமல் போன நிலையில், நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. அதன் பின்பு மீட்பு படையினர் அவரது உடலை தேடி வந்த நிலையில், 30 மணி நேர தேடலுக்கு பின் நேத்ராவதி ஆற்றில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

சித்தார்த்தா முன்னாள் கர்நாடகாவின் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் ஆவார். அவர் காஃபி டே மட்டுமல்லாது பல்வேறு நிறுவனங்களையும் நடத்தி வந்துள்ளார். எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சில நாட்களிலேயே சித்தார்த்தா-வின் நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இதன் பின்னர் தொழிலில் பெரும் நஷ்டம் அடைந்த சித்தார்த்தா, மனமுடைந்து தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சித்தார்த்தாவிற்கு 24 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக ஒரு தகவல் தெரியவந்தது. இதை தொடந்து 8 ஆயிரம் கோடிக்கு மேல் பல நிறுவனங்களிலிருந்தும் வங்கிகளிலிருந்தும் கடன் வாங்கிய விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன.

1.ஐ.டி.பி.ஐ. வங்கி - ரூ.4,475 கோடி.
2.பிரமால் டிரஸ்ட் சிவ் சர்வீஸ் லிமிடெட் - ரூ.175 கோடி.
3.ஆர்.பி.எல். வங்கி - ரூ.174 கோடி.
4.இ.சி.எல். பைனான்ஸ் - ரூ.150 கோடி.
5.ஆக்சிஸ் டிரஸ்டி லிமிடெட் - ரூ.915 கோடி.
6.ஆக்சிஸ் வங்கி - ரூ.315 கோடி.
7.ஆதித்யா பிர்லா பைனான்ஸ் லிமிடெட் - ரூ.278 கோடி.
8.எஸ் வங்கி ரூ.273 கோடி.
9.ஸ்டேண்டர்ட் சார்டெட் லோன்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ட் - ரூ.150 கோடி.
10.கிளிக்ஸ் கேபிடல் - ரூ.150 கோடி.

மேற்கண்ட வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் உட்பட மொத்தம் 24 வங்கிகளில் இருந்து சித்தார்த்தா கடன் பெற்றுள்ளார் என தெரியவருகிறது. இவ்வளவு கடன் பிரச்சனையில் தவித்த சித்தார்த்தா, உலகம் முழுவதும் கிளைகளை கொண்டுள்ள தனக்கு சொந்தமான 12 ஆயிரம் ஏக்கர் காப்பி எஸ்டேட் மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டு ரு.8,200 கோடி ரூபாய் லாபம் ஈட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.