1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. yediyurappa cries after announcing resignation

ராஜினாமா அறிவித்து எடியூரப்பா கண்ணீர் !!

ராஜினாமா
எனது ஆட்சிக்காலம் முழுவதும் அக்னி பரீட்சையாக அமைந்துவிட்டதாகவும் எடியூரப்பா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். 

 
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில் கர்நாடக பாஜகவில் நிலவும் உட்கட்சி மோதல் காரணமாக எடியூரப்பா பதவி விலக கோரிக்கை வலுத்தது.    
 
இந்நிலையில், கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா  ராஜினாமா செய்ய முன் வந்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை  எடியூரப்பா வழங்க உள்ளார். இந்நிலையில் இது குறித்து அவர் கூறியதாவது, 
 
2 ஆண்டு ஆட்சி நிறைவு பெறுவதை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏ.க்களுக்கு பெங்களூருவில் இன்று  காலை எடியூரப்பா விருந்து அளித்துள்ளார். அப்போது எனது ஆட்சிக்காலம் முழுவதும் அக்னி பரீட்சையாக அமைந்துவிட்டதாகவும் எடியூரப்பா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.  
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு