திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 26 ஜூலை 2021 (12:22 IST)

கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா ராஜினாமா

கர்நாடகா முதல்வராக பொறுப் பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் எடியூரப்பா ராஜினாமா செய்தார். 

 
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில் கர்நாடக பாஜகவில் நிலவும் உட்கட்சி மோதல் காரணமாக எடியூரப்பா பதவி விலக கோரிக்கை வலுத்தது.   
 
இந்நிலையில், கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா  ராஜினாமா செய்ய முன் வந்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை  எடியூரப்பா வழங்க உள்ளார். தனது ஆட்சியின் 2-வது ஆண்டு நிறைவை ஒட்டி புத்தகம் ஒன்றை வெளியிட்ட பின் தனது ராஜினாமாவை அறிவித்தார் எடியூரப்பா.