1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: வியாழன், 16 ஜனவரி 2020 (13:53 IST)

உலகின் நீளமான தலைமுடி வளர்த்த பெண்... கின்னஸ் சாதனை !

உலகில்  பிறந்த மக்கள் எதிலாவது சாதனை செய்ய வேண்டும் என கூறிக்கொண்டிருப்பார்கள். அல்லது சாதனை செய்து சரித்திரத்தில் இடம் பிடிப்பார்கள். இந்த நிலையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நீளமான தலை முடியை வளர்த்து சாதனை செய்துள்ளார்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் நிலன் ஷி (17). இந்த சிறிய வயதில் அவர தலைமுடியை 190 செ.மீ நீளமான வளர்த்து சாதனை செய்துள்ளார்.
 
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு 170செ.மீ தலைமுடியை வளர்த்து கின்னஸில் இடம்பிடித்த நிலையில் தற்போது அவரது முந்தைய சாதனையை அவரே முறியடித்துள்ளார்.