இந்தியா செய்த மோசமான சாதனை …15 வருடத்துக்குப் பிறகு !
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமான தோல்வியடைந்துள்ளது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 255 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியாவின் முக்கிய பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்ம, விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் சொதப்பியதால் இந்தியாவால் கவுரவமான ஸ்கோரை எட்ட முடியவில்லை.
அதன் பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் பின்ச் இருவரும் அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பின்றி 256 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் அடித்தனர். ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை ஜெயிப்பது இதுவே முதல் முறையாகும். கடைசியாக இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 2005ஆம் ஆண்டு 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதன்பின்பு 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மோசமான சாதனையை 2020ஆம் ஆண்டில் நிகழ்த்தியுள்ளது.