வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 11 ஜனவரி 2020 (12:36 IST)

மரத்திற்கு இடையே தொங்கவிடப்பட்ட இளம்பெண்... துணை டிஜிபி அசால்ட் பதில்!!

குஜராத்தில் 19 வயது இளம் பெண் கூட்டுபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டத்தில் 19 வயதான இளம்பெண் ஒருவர் தனது சகோதரியுடன் வெளியே சென்றுள்ளார். சகோதரி வீடு திரும்பிய நிலையில் அந்த பெண் வீடு திரும்பாததால் பல இடங்களில் தேடி பார்த்து பின்னர் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் இது குறித்து காணாமல் போன பெண்ணின் சகோதரியிடம் விசாரித்தனர். 
 
அப்போது அந்த பெண், பிமல் ப்ர்வாட் என்பவர் அவரது காரில் அவளை அழைத்து சென்றதாகவும் இதை யாரிடமும் சொல்ல கூடாது என மிரட்டியதாகவும் தெரிவித்தார்.  இதன் பின்னர் விசாரணையை துவங்கிய போலீசார் 3 நாட்களுக்கு பின்னர் வந்த உங்கள் பெண்ணிற்கு வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளார் என குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளனர். 
 
ஆனால், அந்த இளம்பெண் அடுத்த இரண்டு நாட்களில் அதே கிராமத்தில் உள்ள மரத்திற்கு இடையே தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தார். இது அந்த கிராமத்தினரு அதிர்ச்சியை அளித்தது. இறந்த பெண்ணின் உடலை கூறாய்வு செய்ததில் அவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
 
இந்த சம்பவத்தில் இறந்த பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும் என குஜராத்தில் பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. போராட்டம் வலுப்பெற்றுள்ள நிலையில், குஜராத் துணை டிஜிபி ஓஜ்ஹா இது குறித்து பேட்டியளித்துள்ளார். 
 
அவர் கூறியதாவது, ஆரவல்லி பகுதி காவல்துறை கண்காணிப்பாளரிடம் இந்த விவகாரம் மாற்றிவிடப்பட்டுள்ளது. கூடிய விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். இதில் காவல் துறையினர் கவனக்குறைவாக செயல்ப்பட்டுள்ளனரா என்ற விசாரணையும் துவங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.