1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. World leve corruption list for loot

லஞ்சம் கரை புரண்டோடும் நாடுகள் பட்டியல்! – இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்?

National
உலகம் முழுவதும் லஞ்சம் அதிகமாக புழங்கும் நாடுகளின் தரவரிசை பட்டியலை ட்ரேஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல நாடுகளில் பல்வேறு செயல்பாடுகளில் லஞ்சம் கொடுப்பது தொடர்ந்து புழக்கத்தில் இருந்து வருகிறது. இதுபோன்ற லஞ்ச விவகாரங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், கட்டமைப்பில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ட்ரேஸ் என்னும் அமைப்பு பல்வேறு நாடுகளிலும் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் லஞ்சம் குறித்த புள்ளிகளை தயாரித்துள்ளது. அதன்படி அந்த பட்டியலில் இந்தியா 44 புள்ளிகளுடன் 82வது இடத்தில் உள்ளது. முன்னதாக இந்தியா இந்த பட்டியலில் 77வது இடத்தில் இருந்தது.

ஆனால் அண்டை நாடுகளான சீனா, நேபாளம், பாகிஸ்தான் போன்றவற்றை ஒப்பிடுகையில் இந்தியாவில் லஞ்ச விவகாரங்கள் குறைவு என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகமாக லஞ்சம் புழங்கும் அபாய நாடுகளாக வடகொரியா, துர்க்மெனிஸ்தான், வெனிசூலா மற்றும் எரித்ரியா போன்ற நாடுகளும், மிகவும் குறைவான அளவில் லஞ்ச செயல்பாடுகள் உள்ள நாடுகள் பட்டியலில் டென்மார்க், நார்வே, பின்லாந்து, சுவீடன், நியூசிலாந்து போன்ற நாடுகள் உள்ளன.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
தனியார் விடுதியில் பாலியல் தொழில் நடத்திய ஐவர் கைது!