1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 29 ஜனவரி 2021 (07:58 IST)

தங்கத்தின் தேவை 25 ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்தது: என்ன காரணம்?

உலகின் பல நாடுகளில் தங்கத்தை சேமிப்பு கருதி பொதுமக்கள் சேர்த்து வந்தாலும் இந்தியாவைப் பொருத்தவரை தங்கம் மக்களின் கலாச்சாரத்திலேயே உள்ளது
 
திருமணம் உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்காக தங்கத்தை வாங்கி சேமிக்கும் பழக்கம் மக்களிடையே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிக அதிகமாக குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது 
 
இந்தியாவில் 42% தங்கம் இந்த ஆண்டு தங்கத்தின் தேவை குறைந்துள்ளதாகவும் இது 25 ஆண்டுகளில் இல்லாத அளவு என்றும் குறிப்பிட்டுள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக தான் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு இந்தியாவில் ஆபரண தங்கத்தின் தேவை வெகுவாக குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வேலையின்றி வருமானம் இன்றி இருக்கும் பொதுமக்கள் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு கூட தங்கம் இல்லாமல்தான் நடைபெற்று நடத்துகின்றனர் என்று தகவல்கள் வெளி வந்துள்ளது. இந்தியாவில் தங்கத்தின் தேவையை வெகுவாக குறைந்துள்ளதால் உலக தங்க கவுன்சில் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது