உலகிலேயே அதிவேகமாக தடுப்பூசி செலுத்திய நாடு! – அமெரிக்காவை முந்திய இந்தியா!
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் ம்க்களுக்கு அதி விரைவாக தடுப்பூசி செலுத்திய நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பூசியாக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் மருந்துகள் செலுத்தப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் தொடங்கப்பட்டு தொடர்ந்து நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தடுப்பூசி போட தொடங்கி 6 நாட்களில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை விட இந்தியாவில் அதி வேகமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.