வெள்ளி, 7 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2025 (11:18 IST)

இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிவு.. டிரம்ப் அதிரடி நடவடிக்கைகள் காரணமா?

rupees
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, இன்று வணிக நேர முடிவில் 15 காசுகள் குறைந்து ரூ. 87.58 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2025 தொடங்கியதிலிருந்து இந்திய ரூபாய் உள்பட ஆசிய நாடுகளின் நாணயங்கள் கடுமையாக வீழ்ச்சியடைந்த நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் பாதிப்பை கடந்த சில நாட்களாக சந்தித்துள்ளது.
 
2024ஆம் ஆண்டு ஜனவரியில் இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 83.21 ஆக இருந்த நிலையில், தற்போதைய நிலைமையில் சுமார் 3% சரிவை சந்தித்துள்ளது. அதற்கு முக்கிய காரணமாக அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அமல்படுத்தப்பட்ட வரி உயர்வு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் பெரிய அளவில் வெளிநடப்பு செய்வதுதான் ந்ப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்திய பங்குச் சந்தை இன்று இறக்கத்துடன் தொடங்கியதன் தாக்கம் நாணய மதிப்பிலும் வெளிப்பட்டுள்ளது. நேற்று வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணியில் ரூபாய் மதிப்பு 39 காசுகள் சரிந்து ரூ. 87.46 ஆக இருந்தது. இன்று மேலும் 15 காசுகள் சரிந்து இதுவரை இல்லாத குறைந்தபட்ச நிலையில் ரூ. 87.58 ஆக குறைந்துள்ளது.
 
Edited by Mahendran