WHO-வின் வல்லுநர் குழு ஆலோசனை: அனுமதி கிடைக்குமா கோவாக்சினுக்கு?
கோவாக்சினுக்கு உலக சுகாதார நிறுவனம் அவரசகால பயன்பாட்டுக்கான அனுமதி வழங்கும் என எதிர்ப்பார்ப்பு.
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
இதனிடையே மத்திய அரசு கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்காக அனுமதி அளித்திருந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு இன்னும் அனுமதி அளிக்கவில்லை.
இந்நிலையில் கோவாக்சினுக்கு உலக சுகாதார நிறுவனம் அவரசகால பயன்பாட்டுக்கான முறையான அனுமதியை விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆம், இன்று உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுநர் குழு இன்று ஆலோசனை நடத்த உள்ளது. இதில் உலக சுகாதார அமைப்பின் அவசர கால அனுமதி கோவாக்சின் தடுப்பூசிக்கு மிகவும் முக்கியமாகும்.