திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 4 அக்டோபர் 2021 (15:09 IST)

கொரோனா மரணங்களில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள்! ஆய்வில் முடிவு!

தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரு மாதங்களில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள் என்று தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 33ஆயிரத்து 575 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர்களின் 1268 பேர் ஆகும். இந்த 1268 பேரில் கிட்டத்தட்ட 89 சதவீதம் பேர் ஒரு டோஸ் கூட தடுப்பூசி போடாதவர்கள். மற்றும் 7.41 சதவீதம் பேர் ஒரு டோஸ் மட்டும் போட்டவர்கள். 3.55 சதவீதம் பேர் மட்டும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.