1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 18 ஜனவரி 2023 (13:48 IST)

கணவர் பாகிஸ்தானி என்று தெரிந்தவுடன் மனைவி எடுத்த அதிரடி முடிவு

wife
தன்னுடைய கணவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிந்தவுடன் இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பிரியங்கா என்பவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் தனது கணவரின் பேஸ்புக் தாக்கத்தை பார்த்த பிரியங்கா அவர் பாகிஸ்தான் தேசிய கொடியை வைத்திருந்ததால் அவர் பாகிஸ்தானி என்பதை தெரிந்து கொண்டார். 
 
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திடீரென வீட்டை விட்டு வெளியேறினார். அதன்பின் அவர் போபால் நகரில் ஒரு ஆணுடன் வசித்து வந்ததாகவும் தெரியவந்தது. இதனை அடுத்து பிரியங்காவை அழைத்து போலீசார் விசாரணை செய்தபோது,  தனது கணவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவருடன் வாழ விரும்பவில்லை என்றும் தற்போது வாழ்ந்து வருபவருடன் தான் நான் தொடர்ந்து வாழ விரும்புவதாகும் கூறியுள்ளார்
 
இதனை அடுத்து ஒரு பெண் யாருடன் வாழ வேண்டும் என்பது அவருடைய சுய முடிவு என்பதால் அந்த பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran