திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 17 ஜனவரி 2023 (19:37 IST)

''காஷ்மீர் பைல்ஸ்'' பட இயக்குனரின் மனைவி விபத்தில் படுகாயம்!

pallavi joshi
பிரபல நடிகை பல்லவி ஜோஷி இன்று ஷூட்டிங் தளத்தின் விபத்து ஏற்பட்டு காயமடைந்துள்ளார்.
 

ஜம்மு காஷ்மீரில் இருந்து கடந்த 1981 ல் இந்துக்கள் வெளியேறினர். இதை மையப்படுத்தி, பாலிவுட் இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னி ஹோத்ரி தி காஷ்மீர் பைல்ஸ் என்ற படத்தை இயக்கினார்.

இந்தப் படம் மிகப்பெரிய  வெற்றிபெற்று, வசூலிலும் சாதனை படைத்து. நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை அடுத்து, விவேக் அக்னி ஹோத்ரி தற்போது ஒரு புதிய படம் இயக்கி வருகிறார். இப்படத்தை அபிஷேக் அகர்வால் தயாரித்து வருகிறார்.

இப்படத்தில்,  விவேன் அக்னி ஹோத்ரியின் மனைவியும் தேசிய விருது வென்ற நடிகையுமான பல்லவி ஜோஷி  நடித்து வருகிறார். இப்பட ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வரும் நிலையில்,  அவரது கார் விபத்தில் சிக்கியதில் அவர் காயமடைந்துள்ளார்.

தன் காட்சிகள் முடிந்த பின்னர் தான் நடிகை பல்லவி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.