வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 17 ஜனவரி 2023 (07:55 IST)

விபத்தில் உயிரிழந்த கணவன், மனைவி விமானிகள்..நேபாள விபத்தில் ஒரு சோகம்!

Flight
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் நேபாளத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி 72 பேர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஐவர் என்பதும் அதில் ஒருவர் விமான விபத்து நடைபெறுவதற்கு சில நொடிகளுக்கு முன் எடுத்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த விமான விபத்தில் பெண் விமானி அஞ்சு என்பவர் மரணமடைந்தார். அவர் இந்த விமானத்தில் துணை விமானியாக பணியாற்றி வந்த நிலையில் இந்த விபத்தில் சிக்கியவர் மரணம் அடைந்தார்
 
ஏற்கனவே இவரது கணவர் தீபக் என்பவர் கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த விமான விபத்தில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கணவன் மனைவி ஆகிய இருவருமே விமானிகள் ஆக இருந்த நிலையில் இருவரும் விமான விபத்தில் உயிரிழந்துள்ளது அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva