1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 12 மே 2019 (17:06 IST)

ஓட்டு போட வராத பிரியங்கா காந்தியின் மகன்? காரணம் இதுதான்!

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய ஜனநாயக கடமையான ஓட்டு போடுவதை நிறைவேற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகின்றது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இதனை வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரியங்கா காந்தியின் மகன் ரேஹன் வதேரா இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் ஓட்டு போடாமல் லண்டனுக்கு சென்றுவிட்டார்.
 
இதுகுறித்து இன்று டெல்லியில் தனது கணவருடன் ஓட்டு போட வந்த பிரியங்கா காந்தி கூறியபோது, 'ரேஹன் வதேரா லண்டனில் படித்து கொண்டிருக்கின்றார். அவருக்கு இன்று தேர்வு என்பதால் அவரால் ஓட்டு போட முடியவில்லை' என்று விளக்கம் அளித்தார்.
 
பிரியங்கா காந்தியின் மகன் ரேஹன் வதேராவுக்க் 19 வயது ஆவதால் அவர் முதல்முறையாக ஓட்டு போட தகுதி பெற்றும் தேர்வு காரணமாக அவரால் ஓட்டு போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் பிரியங்கா காந்தியுடன் ரேஹன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது