புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 2 மே 2019 (20:33 IST)

வாகனத்தை ஓட்டும் போது மரணமடைந்த தந்தை : சாமர்த்தியமாக வாகனத்தை நிறுத்திய சிறுவன்

கர்நாடக மாநிலம் தூம்கூரில் உள்ள தூர்காதாஹல்லி என்ற பகுதியில் வசித்து வந்தவர் சிவகுமார் (35).  இவருக்கு முனிரத்னம்மா என்ற மனைவி இருக்கிறார், இந்த தம்பதிக்கு புனிதர்த் ( 10 ) நரசிம்மராஜூ95) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இவர் ஒரு பிரபலமான குக்கர் கம்பெனிக்கு வாகன ஓட்டியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல தனது வாகனத்தில் குக்கர் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஹுலியாறு என்ற பகுதியிலுள்ள ஒரு கடையில் இறக்குவதற்காக சென்றார்.
 
தற்போது பள்ளிக்கு விடுமுறை ஆதலால் தனது மூத்த மகன் பூனிர்த்தை தன்னுடன் அழைத்துச் சென்றிருந்தார். அப்போது நண்பகல் 12 மணி அளவில் வாகனத்தை இயக்கிக் கொண்டு சென்ற சிவக்குமாருக்கு மாரடைப்பு வந்தது. அதனால் அந்நொடியே அவர் உயிரிழந்தார். 
 
படத்தில் வருவது போல் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. தந்தையில் கை ஸ்டீரிங்கி இருந்து விட்டதை பார்த்த சிறுவன் பூனிர்த் பதறினான். ஆனால் புத்திசாலித்தனமாக வாகனத்தை நிறுத்தியுள்ளான். மாரடைப்பால் தந்தை இறந்த நிலையில் சிறுவன் தைரியமாக வாகனத்தை நிறுத்தி விபத்திலிருந்து தற்காத்துக் கொண்டது  பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.