செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (19:59 IST)

பாஜக தோல்வி பயத்தால் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது - பிரியங்கா காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்தியர் தான் என்பதை உறுதிசெய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், இதுபற்றி இன்னும் 15 நாட்களில் விளக்கம் தர வேண்டும் என்று அவரிடம் கேட்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். 
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி தற்போது ஒரு பரபரப்பான பிரச்சனையைக் கிளப்பியுள்ளார். அதில், ’’ராகுல்காந்தி பேக்காப்ஸ் நிறுவனத்தின் ஆவணங்களை தாக்கல் செய்யும் போது தான் ஒரு பிரிட்டிஷ் குடிமகன் ’’என்று குறிப்பிட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.
தற்போது இதுசம்பந்தமாக  மத்திய உள்துறை அமைச்சகம் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
இந்நிலையில் இதுகுறித்து பிரியங்கா காந்தி கூறியதாவது : பாஜக தோல்வி பயத்தால்தான் இந்த மாதிரி நோட்டீஸை ராகுலுக்கு அனுப்பியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.