திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 9 மே 2019 (10:27 IST)

மனைவிக்கு ஓட்டு கேட்க போய் அவமானம்: விறுவிறுவென நடையை கட்டிய நடிகர்!

மனைவிக்காக ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்ய போன நடிகர் அனுபம் கெர் அவமானப்பட்டு திரும்பி வந்துள்ளார். 
 
பாலிவுட் நடிகர் அனுபம் கெர் மற்றும் அவரது மனைவி கிரண் கெர் ஒருவரும் பாஜகவை சேர்ந்தவர்கள். இந்ந்த முரை கிரண் கெய்ருக்கு பாஜக சீட் கொடுத்துள்ளது. 
 
இதனால் மனைவிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டிருந்தார் அனுபம் கெர். அந்த வகையில் சமீபத்தில் அவர் சண்டிகரில் மனைவிக்காக கடை கடையாக வீடு வீடாக ஏறி இறங்கி ஓட்டு கேட்டார். 
 
அப்போது எதிர்பாராத விதமாக ஒரு கடைக்காரர், ஒரு காகிதத்தை அனுபம் கெரிடம் நீட்டி, இது பாஜக கடந்த தேர்தல் போது அளித்த வாக்குறுதிகள். பாஜக ஆட்சிக்கு வந்து 5 வருஷமாச்சு. இதில் நீங்கள் எதையாவது நிறைவேற்றியுள்ளீர்களா? என கேள்வி கேட்டார். 
இதற்கு பதில் அளிக்க முடியாமல் உடனடியாக அந்த கடையை விட்டு விறுவிறுவென வெளியே கிளம்பிவிட்டார். இது வீடியோவாக தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது அவருக்கு பெரிய அவமானமாகவும் பார்க்கப்படுகிறது. 
 
ஏனெனில் இதற்கு முன்னர் ஓட்டு கேட்டு சென்ற இடத்தில் எல்லாம் அவரை பார்க்க மக்கள் ஆர்வமாக கூடுனர். அவரோடு சேர்ந்து செல்பி, அவரிடம் ஆட்டோகிராப் என அவரிடம் மக்கள் கூட்டம் அலைமேதியது என்பது குறிப்பிடத்தக்கது.