வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 31 மே 2019 (20:44 IST)

புதிய சபாநாயகர் தேர்வு எப்போது ? புதிய தகவல்

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 354 தொகுதிகளிலும், காங்கிரஸ் 52 தொகுதிகளிலும் வென்றது குறிப்பிடத்தக்கது.நாட்டில் இரண்டாவது முறை பிரதமராக மோடி நேற்று மாலை பதவியேற்றார். அவருடன் அவரது அமைச்சரவையில் இடம்பெறுகிறவர்களும் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.
மோடி அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களுக்கு இன்று காலையில் இலாகா துறைகள் ஒதுக்கப்பட்டது.இதனைத்தொடந்து நாட்டின் 17வது மக்களவைத்தேர்தலில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மோடி இரண்டாவது முறையாக பிரதமராகப்பொறுப்பேற்று தனது அலுவலகத்தில் இன்று பணிகளைத் தொடங்கினார்.
 
இந்நிலையில் புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளிட்டுள்ளது மனித வள மேம்பாட்டு அமைச்சகம். 
 
இதனையடுத்து ஜூன் 19 ஆம் தேதி மக்களவைக்கான புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படவுள்ளார்.
 
மேலும்ஜூன் 17 ஆம் தேதி தொடங்கும் நாடாளுன்ற கூட்டத்தொடர் ஜூலை 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கடந்த 16 வது மக்களவையில் சுமிந்த்ரா மகாஜன் மக்களவைத் தலைவராகப் பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.