1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. BJP member Ila Ganeshan thrashes ADMK

ஜெயிக்க வெக்காமா, பதவி மட்டும் கேட்டா... அதிமுகவை விளாசிய பாஜக மூத்த தலைவர்

பாஜக
பாஜக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யாமல் அமைச்சரவையில் இடம் அளிக்காதது குறித்து கேட்பது நியாமில்லை என இல.கணேசன் தெரிவித்துள்ளார். 
 
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் நேற்று ஆட்சி அமைத்தது. நேற்று மீண்டும் பிரதமராக பதவியேற்ற மோடியுடன் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளோரும் பதவியேற்றனர். இன்று அமைச்சர்களுக்கான இலாகாவும் ஒதுக்கப்பட்டது. 
 
தமிழகத்தை பொருத்த வரை நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே தொகுதி ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்ட தேனி மக்களவை தொகுதி ஆகும். எனவே, ரவீந்திரநாத்திற்கு மத்திய அமைச்சர் பதவியை வாங்கி கொடுத்துவிட வேண்டும் என ஓபிஎஸ் பல டெல்லி பயணங்களை மேற்கொண்டார். ஆனால், இவை எதுவும் எடுபடவில்லை. 
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், பாஜக வேட்பாளர்களை வெற்றிபெற செய்யாமல் அமைச்சரவையில் இடம் அளிக்காதது குறித்து கேள்வி எழுப்புவது பொருத்தமாக இருக்காது என்றார். மேலும், தமிழகத்துக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்றாலும், உரிய நேரத்தில் இது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 
அடுத்த கட்டுரையில்
நீட்டே வேண்டாம் என்றால் சொன்னால் ஆயூர்வேதம் , யுனானி அனைத்திலுமா ? - மாணவர்களை அச்சுறுத்தும் மத்திய அரசு !