மோடி அரசின் புதிய கல்விக்கொள்கை வெளியீடு !

modi
Last Modified வெள்ளி, 31 மே 2019 (20:31 IST)
மோடியின் மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களுக்கு இன்று காலையில் ( இலாகா) துறைகள் ஒதுக்கப்பட்டது. இதனைத்தொடந்து நாட்டின் 17வது மக்களவைத்தேர்தலில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மோடி இரண்டாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்று தனது அலுவலகத்தில் இன்று பணிகளைத் தொடங்கினார்.
இந்நிலையில் புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளிட்டுள்ளது மனித வள மேம்பாட்டு அமைச்சகம். 
 
இந்தக் கல்விக்கொள்கையானது  மொத்தம் 484 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.இப்புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு மீது ஜூன் 30 ஆம் தேதிவரை மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
[email protected]  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளனர்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :