1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 31 மே 2019 (18:09 IST)

பிரதமர் பணியைத் தொடங்கிய மோடி : முதல் நாளே அதிரடி

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 354 தொகுதிகளிலும், காங்கிரஸ் 52 தொகுதிகளிலும் வென்றது குறிப்பிடத்தக்கது.நாட்டில் இரண்டாவது முறை பிரதமராக மோடி நேற்று மாலை பதவியேற்றார். அவருடன் அவரது அமைச்சரவையில் இடம்பெறுகிறவர்களும் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் இன்று அமைச்சரவையில் இடம்பெற்றவரக்ளுக்கான இலாகா ஒதுக்கப்பட்டது.
 
இதனையடுத்து தேர்தலுக்குப் பின்னர் இன்று தனது அலுவலகத்தில் பணியைத்  தொடங்கிய பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு நிதியில் இருந்து பாதுகாப்புப்படை மற்றும் காவல் துறை அதிகாரிகளின் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்க முடிவு செய்துள்ளார்.
 
மேலும் தேசிய பாதுகாப்பு நிதியில் இருந்து வழங்கப்படும் உதவித் தொகையை மத்திய நிதி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.இதையடுத்து வீரமரணமடையும் வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வி உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
மாணவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகையை அதிகரித்து  வழங்கவும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
மாணவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ. 2000 லிருந்து ரூ. 2500 ஆக அதிகரித்தும், மாணவிகளுக்கான உதவித்தொகை ரூ. 2250 லிருந்து ரூ. 3000 ஆக அதிகரிக்க மத்திய ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.