செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 20 ஜூன் 2020 (10:36 IST)

அடுத்து கங்கண சூரிய கிரகணம் எப்போது வரும்?

அரிய வானியல் நிகழ்வான கங்கண சூரிய கிரகணம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நிகழவுள்ளது. 
 
சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படும். இதில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும் போது அது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.  
 
சில நேரங்களில் நிலவால் மறைக்கப்பட்ட சூரியன் ஒரு வளையம் போல் வானில் காட்சி தரும். இது நெருப்பு வளைய சூரிய கிரகணம் அல்லது கங்கண சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
 
இதுபோன்ற கங்கண சூரிய கிரகணம் முன்னதாக 2010 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி, 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதியும் ஏற்பட்டது. 
 
அடுத்ததாக ஜூன் 20 (நாளை) கங்கண சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. மத்திய ஆப்ரிக்கா, காங்கோ, எத்தியோப்பியா, தெற்கு பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியும்.
 
அடுத்த சூரிய கிரகணம் 2020 டிசம்பர் 14 ஆம் தேதி தோன்றும். ஆனால், கங்கண சூரிய கிரகணம் அடுத்து 2031 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி தான் இனி காண முடியும்.