வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 27 மார்ச் 2019 (21:43 IST)

டெபாசிட் காலி என்றால் என்ன? ஒரு வேட்பாளர் எவ்வளவு ஓட்டு வாங்க வேண்டும்!

தேர்தலில் போட்டியிடுபவர்கள் பலர் டெபாசிட் இழந்ததாக செய்திகளில் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். டெபாசிட் இழப்பு என்றால் என்ன தெரியுமா? இதோ தெரிந்து கொள்வோம்
 
ஒரு மக்களவை தேர்தலில் ஒரு வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்றால் வேட்புமனுவுடன் டெபாசிட் தொகை ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த டெபாசிட் தொகை தேர்தல் முடிந்த பின்னர் தேர்தல் ஆணையம் திரும்ப கொடுத்துவிடும். ஆனால் அதிலும் ஒரு நிபந்தனை
 
அதாவது பதிவான செல்லத்தக்க வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றிருந்தால் மட்டுமே டெபாசிட் திரும்ப கிடைக்கும். அதாவது ஒரு தொகுதியில் 6 லட்சம் ஓட்டுக்கள் பதிவாகியிருந்தால் குறைந்தது ஒரு லட்சம் ஓட்டு பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் டெபாசிட் திரும்ப கிடைக்காது.
 
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர். அதேபோல் இதே தேர்தலில் மதிமுக 27 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது. 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட 37 காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இதேபோல் 6ல் ஒரு பங்கு ஓட்டுக்கள் வாங்காத பலர் டெபாசிட் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
2019ஆம் ஆண்டு தேர்தலிலும் முக்கிய புள்ளிகள் உள்பட பலர் டெபாசிட் இழக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் யார் யார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்