ஒரே பேட்டி.. மொத்தம் க்ளோஸ்: பாஜகவின் கொஞ்ச நெஞ்ச மானத்தையும் வாங்கிய சு.சுவாமி!

Last Updated: புதன், 27 மார்ச் 2019 (19:52 IST)
பாஜகவிற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் இருந்தாலும், அக்கட்சியுடன் கூட்டணியில் அமைத்துள்ள அதிமுக, தேமுதிக, பாமக ஆகியவை பாஜகவையும் மோடியையும் பிரச்சாரங்களில் புகழ்ந்து பேசியே வருகின்றனர். 
ஆனால், பாஜகவின் மூத்த மற்றும் முக்கிய தலைவரான சுப்பிரமனியன் சுவாமி பாஜகவை கிழித்து தொங்கவிட்டுள்ளார். இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பின்வருமாறு பேசினார்,
 
டிடிவி தினகரனுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னம் வழங்க மறுப்பது தவறு. வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகளையும், VVPAT இயந்திரத்தில் பதிவான வாக்கு விவரங்களையும் ஒப்பிட்டு வாக்கு எண்ணிக்கையை முடிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது வரவேற்கத்தக்கது. 
நான் தனித்து போட்டியிடுவதையே விரும்பினேன். இவர்களின் கூட்டணி சீட்டுக்காகவே, கொள்கைக்காக இல்லை. அதிமுக - பாஜக கூட்டணி சகோதர கூட்டணி ஒன்றும் இல்லை. வாக்குகள் சிதற கூடாது என்பதற்காகவும், திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :