வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 முக்கிய வேட்பாளர்கள்
Written By
Last Updated : புதன், 27 மார்ச் 2019 (17:11 IST)

தூத்துக்குடியில் அவமானப்பட்ட தமிழிசை: விரட்டப்பட்ட சோகம்!

தூத்துகுடி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திராஜன் வேட்புமனு ஏற்கக்கூடாது என திமுக தரப்பில் கூறப்பட்டு பின்னர் ஒருவழியாக வெட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 
 
இந்நிலையில், தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்ய சென்ற பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் அங்கிருந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு அவர் திருப்ப்பி அனுப்பப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. 
 
இது சம்மந்தமன வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிரது. அதவாது, தமிழிசை அங்கு பிரச்சாரம் செய்ய வரக்கூடாது எனவும், பிரச்சனையின் போது வராமல் இப்போது மட்டும் அவர் ஏன் இங்கு வருகிறார் என்றும் மக்கள் கேள்வி எழுப்பினார்கள். 
இதனால் சிறுது நேரம் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவாகி தமிழிசை அங்கு இருந்து சென்றார். பின்னர் போலீஸார் வந்து மக்களை சமாதானம் செய்ததும் தனது பிரச்சாரத்தை துவங்கினார். 
 
நேற்றும் இது போன்று எச்.ராஜா சிவகங்கையில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்ட போது அங்கிருந்த மக்கள் பெரியார் வாழ்க என முழக்கமிட்டு எச்.ராஜாவை அவமான படுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக, மொத்தம் தமிழகத்தில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்புகள் குறைவு என்றே இதன் மூலம் தெரிகிறது.