தமிழிசை வேட்புமனு: அதிரடி முடிவெடுத்த தேர்தல் அதிகாரி

tamilisai
Last Modified புதன், 27 மார்ச் 2019 (14:41 IST)
தூத்துகுடி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்திரராஜன் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று திமுக தரப்பு கடும் எதிர்ப்புதெரிவித்தது. அவர் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் இயக்குனர் பதவியில் இருப்பதை மறைத்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக திமுகவினர் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டனர்.

ஆனால்
பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் இயக்குனர் பதவியை முறையாக ராஜினாமா செய்துவிட்டதாகவும், திமுக புகார் வெற்று வேலை' என்றும் தமிழிசை செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் தமிழிசையின் வேட்புமனு தேர்தல் அதிகாரியால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துகுடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை களம் காண்பது உறுதியாகிவிட்டது.
தனது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழிசை கூறியபோது, 'தேர்தல் அதிகாரிகளுக்கும், தனது சட்டநிபுணர்கள் குழுவிற்கும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும், தன் மீது அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை திமுகவினர் சுமத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :