தொடர்புடைய செய்திகள்
- 2024 இல் நாங்கள் ஆளும் கட்சி வரிசையில் இருப்போம்: பாராளுமன்றத்தில் தயாநிதி மாறன் முழக்கம்..!
- சிறுபான்மையினர் பற்றிய சீமான் பேச்சுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதிலடி
- மணிப்பூர் விவகாரம்: குடியரசுத் தலைவரை சந்திக்கிறது 'I.N.D.I.A' எம்.பி.க்கள் குழு..!
- மணிப்பூர் விவகாரம்: மத்திய மாநில அரசூகள் மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி..!
- 10 கோடி ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்திட ஒப்புதல் வழங்கிடக் கோரி மணிப்பூர் முதல்வருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
ஆயுதக்கிடங்கில் நுழைந்து ஏகே 47 துப்பாக்கிகளை கொள்ளையடித்த கும்பல்.. மணிப்பூரில் பரபரப்பு..!
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறை நிகழ்ந்து வரும் நிலையில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் மணிப்பூரில் வன்முறை ஏற்பட்டுள்ளதாகவும் இந்த வன்முறையின் போது திடீரென பிஷ்னுபூர் என்ற மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஆயுதக் கிடங்கின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மக்கும்பல் அங்கிருந்த ஏகே 47 மற்றும் உயர் ரக துப்பாக்கிகளை கொள்ளையடித்ததாக தெரிகிறது.
மேலும் 19 ஆயிரம் தோட்டாக்களையும் மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுவதால் மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
Edited by Siva
