திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (18:41 IST)

2024 இல் நாங்கள் ஆளும் கட்சி வரிசையில் இருப்போம்: பாராளுமன்றத்தில் தயாநிதி மாறன் முழக்கம்..!

2024 ஆம் ஆண்டு தேர்தல் முடிந்தவுடன் நாங்கள் ஆளுங்கட்சியாக இருப்போம் என பாராளுமன்றத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் முழங்கியுள்ளார். 
 
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமராக வந்து பேச வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி வரும் நிலையில் பிரதமர் அவைக்கு வருவதை தவிர்த்து வருகிறார். 
 
இந்த நிலையில் இன்று திமுக எம்பி தயாநிதி மாறன் இன்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் பேசிய போது மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் அவைக்கு வந்து பேச வேண்டும் என்று வலியுறுத்தினார். 
 
மேலும் 2024 ஆம் ஆண்டு நாங்கள் ஆளும் கட்சியில் வரிசையில் இருப்போம் என்றும் அவர் உறுதிப்படக் கூடிய உள்ளார்
 
Edited by Mahendran