திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (16:26 IST)

மணிப்பூர் விவகாரம்: மத்திய மாநில அரசூகள் மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி..!

மணிப்பூர் விவகாரம் குறித்த வழக்கு என்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய, மாநில அரசுகள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
மணிப்பூரில் கடந்து சில மாதங்களுக்கு முன்னர் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர் அலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இது குறித்த வழக்கு சுப்ரீம் போட்டியில் இன்று நடைபெற்ற நிலையில் மணிப்பூரில் சட்டம் ஒழுங்கே இல்லை என்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார் 
 
மேலும் விசாரணை மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது என்றும் வழக்கு பதிவு செய்வதில் காலதாமதம் ஆகி உள்ளது என்றும் கைது நடவடிக்கை இல்லை என்றும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவில்லை என்றும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
 
 கடந்த இரண்டு மாதங்களாக எஃப்ஐஆர் கூட போட முடியாத மோசமான சூழல் அங்கு இருந்துள்ளது என்றும் அரசியல் இயந்திரம் முற்றிலும் பழுதடைந்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.  உச்சநீதி தலைமை நீதிபதி தெரிவித்த அதற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva