1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 18 ஏப்ரல் 2024 (15:51 IST)

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்..! வாக்குச்சாவடி மையங்களில் பலத்த பாதுகாப்பு..!!

EVM Machine
தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்றது.
 
தமிழகத்தில் நாளை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் நடைபெற்று வருகின்றன. 
 
அதன்படி  கோவையில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் குறிப்பிட்ட மையத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. 
 
வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் ஒவ்வொரு வாகனத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கோவை மக்களவை தொகுதியில் 6 சட்டமன்றங்களில் 582 மையங்கள் 2059 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
EVM Machineee
உசிலம்பட்டியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச் சாவடி மையங்களுக்கு ஏற்றி அனுப்பும் பணிகளை தேனி ஆட்சியரும்,  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.வி.ஷஜீவனா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 14 வாக்குச்சாவடிகள்  பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. 

 
இவற்றில் 21 வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவின்போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது.  இதனிடையே 288 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்றது.