வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 3 அக்டோபர் 2022 (18:13 IST)

திருப்பதி மலையில் மனைவியை தோளில் சுமந்து சென்ற கணவன் !வைரலாகும் புகைப்படம்

andra
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், மனைவியின் சவாலை ஏற்று அவரை கணவன் தூக்கிச் சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கனியபுலங்கா என்ற பகுதியில் வசித்து வரும் ஒரு தம்பதியர்க்கு குழந்தை பிறந்ததை அடுத்து, வேண்டுதலை நிறைவேற்ற, இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்றனர்.

அப்போது, வேகமாகப் படியில் ஏறிய தன் கணவன் சத்திய நாராயணனிடம்  தன்னை தூக்கிக் கொண்டு படியில் ஏறும்படி சவால் விடுத்தார்.  மனைவி லாவண்யாவின் சவாலை ஏற்று அவரை தோளில் தூக்கிச் சென்றார். சில படிகள் ஏறியதும், சத்திய நாராயணன் திணறவே, லாவண்யா கீழிறங்கிக் கொண்டார்.

இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 
Edited by Sinoj