35 மணி நேர காத்திருப்பு: பக்தர்களை சோதிக்கும் ஏழுமலையான்!
நாளை புரட்டாசி சனிக்கிழமை என்பதால் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் திருப்பதியில் அலைமோதியுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 27 ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பல்வேறு வாகனங்களில் மலையப்ப சாமி பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளினார்.
இந்நிலையில் நாளை புரட்டாசி சனிக்கிழமை என்பதால் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் திருப்பதியில் அலைமோதியுள்ளனர். ஆம், ஏழுமலையான் கோயிலில் இலவச சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 35 மணி நேரம் வரிசையில் காத்திருக்கின்றனர். இந்த வரிசை 6 கி.மீ. தூரத்திற்கு இருக்கிறது என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த திருப்பதி பிரம்மோற்சவ விழாவை காண 9.70 லட்சம் பக்தர்கள் பங்கேற்றுள்ளனர் என தெரிய வந்துள்ளது. அதோடு ரூ.20 கோடிக்கு உண்டியலில் காணிக்கை வசூலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited By: Sugapriya Prakash