1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Stock Market Ends Week on Positive Note: Sensex Rises by 415 Points

நேற்று மதியத்திற்கு மேல் உயர்ந்த வகையில் இன்றும் பங்குச்சந்தை உயர்வு.. சென்செக்ஸ் நிலவரம்..!

பங்குச்சந்தை
நேற்று பங்குச்சந்தை காலையில் சரிந்தாலும், மதியத்திற்கு மேல் திடீரென உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்த நிலையில், இன்று வாரத்தின் கடைசி நாளிலும் பங்குச்சந்தை உயர்ந்து இருப்பது திருப்தியை அளித்துள்ளது.
 
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்து 85,210 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 126 புள்ளிகள் உயர்ந்து 26,025 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், டாக்டர் ரெட்டி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இண்டிகோ, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், டி.சி.எஸ். உள்ளிட்ட பங்குகளின் விலை உயர்ந்துள்ளது. 
 
அதேபோல், பஜாஜ் ஆட்டோ, டாக்டர் ரெட்டி, ஹெச்.சி.எல். டெக்னாலஜி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், இன்ஃபோசிஸ், ஓ.என்.ஜி.சி., ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகளின் விலை சரிந்து வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
சென்னையில் சுரங்க பாதையில் சிக்கிய பொக்லைன் இயந்திரம்.. போக்குவரத்து பாதிப்பு!