செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 19 அக்டோபர் 2022 (09:08 IST)

ட்ராக்டரில் சிக்கி துண்டு துண்டான குழந்தை..! – திருப்பதியில் அதிர்ச்சி சம்பவம்!

திருப்பதியில் உழவு ட்ராக்டரின் கலப்பையில் சிக்கி குழந்தை துண்டு துண்டாக சிதறி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் உள்ள வேடாம் கிராமத்தை சேர்ந்தவர் முனிசந்திரா. இவருக்கு முனிராதா என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒன்றரை வயதில் தேவான்ஸ் என்ற ஆண் குழந்தை உள்ளது.

முனிசந்திரா வயலுக்கு தன் ஒன்றரை வயது குழந்தை தேவான்ஸையும் தூக்கிக் கொண்டு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு அவரது உறவினர் மகேஷ் என்பவர் ரொட்டாவேட்டர் கலப்பையை ட்ராக்டரில் இணைத்து உழவு செய்துக் கொண்டிருந்துள்ளார்.


அப்போது குழந்தை தேவான்ஸ் அழவே குழந்தையை அமைதிப்படுத்த ட்ராக்டரில் உட்கார வைத்துக் கொண்டு ட்ராக்டரை ஓட்டியுள்ளார். அப்போது அவர் வேகமாக ட்ராக்டரை இயக்கவே குழந்தை தேவான்ஸ் தவறி வயல் சேற்றில் விழுந்துள்ளான்.

அதை கவனிக்காமல் மகேஷ் ட்ராக்டரை இயக்கியதால் கலப்பையில் சிக்கி மூன்று துண்டுகளாகி குழந்தை தேவான்ஸ் பரிதாபமாக பலியாகியுள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பவ இடம் சென்ற போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edited By: Prasanth.K