செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

விஜய் மல்லையா உள்பட தொழிலதிபர்களிடம் இருந்து ரூ.18 ஆயிரம் கோடி மீட்பு: மத்திய அரசு

இந்திய வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகள் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்ற விஜய் மல்லையா உள்பட தொழில் அதிபர்களிடம் இருந்து 18 ஆயிரம் கோடியை மீட்டு விட்டதாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது 
 
தொழிலதிபர் விஜய் மல்லையா, மெகுல் சோக்சி, நீரவ் மோடி ஆகியவர்கள் இந்திய வங்கிகளிடம் சுமார் 67 ஆயிரம் கோடி கடன் பெற்று விட்டு வெளிநாட்டுக்கு தப்பி செல்லப்பட்டதாக கூறப்பட்டது
 
இதில் 18 ஆயிரம் கோடியை மீட்டுள்ளதாக மத்திய அரசு வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுடைய சொத்துக்களை பறிமுதல் செய்து மீதமுள்ள தொகையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
கடந்த டிசம்பர் மாதம் 13 ஆயிரத்து 150 கோடியை மீட்டு விட்டதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ள நிலையில் தற்போது மேலும் 5000 கோடி மீட்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி மோசடி மெகுல் சோக்சி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்த நீரவ் மோடி ஆகியோர்களும் இந்தியாவால் தேடப்பட்டு வரும் தொழிலதிபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது