1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. vandhe barath train in fire accident

முதல்முறையாக வந்தே பாரத் ரயிலில் தீ விபத்து.. பயணிகளுக்கு ஆபத்தா?

வந்தே பாரத்
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் வந்தே பாரத் ரயில் இயங்கி வரும் நிலையில் முதல் முறையாக வந்தே பாரத் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
போபாலில் இருந்து டெல்லி சென்ற வந்தே பாரத் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் ரயிலுள்ள பேட்டரியில் ஏற்பட்ட தீ, ரயிலில் பரவியதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்து குறித்த தகவல் தெரிந்ததும் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு தீ அணைக்கப்பட்டதாகவும் இந்த ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு உள்பட ஒரு சில அசம்பாவிதமான சம்பவங்கள் நடந்திருந்தாலும் முதல் முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
தென்மேற்கு பருவமழை, புதிய வீரியத்துடன் கனமழை பெய்யும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!