திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 8 ஜூலை 2023 (17:43 IST)

காவி நிறத்திற்கு மாறிய வந்தே பாரத் ரயில்.. போராட்டத்திற்கு தயாராகும் எதிர்க்கட்சிகள்..!

vande bharath
வந்தே பாரத் ரயில் தற்போது வெள்ளை மற்றும் நீல நிறங்களில் இயங்கி வரும் நிலையில் வெள்ளை நிறங்களில் உள்ள வந்தே பாரத் ரயில்களை காவி நிறத்திற்கு மாற்ற ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
கடந்த சில ஆண்டுகளாக வந்தே பாரத் ரயில்கள் அதிகமாக இந்தியாவில் இயக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் இருந்து மைசூருக்கும் கோவைக்கும் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தகக்து.
 
சென்னையில் இருந்து நெல்லை மற்றும் திருப்பதிக்கு விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த நிலையில் வெள்ளை வந்தே பாரத் ரயில்கள் விரைவில் அழுக்காகி விடுகிறது. இதனை  அடுத்து அந்த ரயில்களும் காவி நிறத்துக்கு மாற்றப்பட இருப்பதாகவும் நீல நிறத்தில் உள்ள வந்தே பாரத் ரயில் அதே நேரத்தில் செயல்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
காவி நிறத்திற்கு மாற்றப்பட்ட வந்தே பாரத் ரயில்களை இன்று மதிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளனர்
 
Edited by Mahendran