செவ்வாய், 4 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 ஜூலை 2023 (09:45 IST)

இன்றும் சில நிமிடங்களில் தீர்ந்து போன தீபாவளி ரயில் டிக்கெட்டுகள்! – அதிர்ச்சியில் பயணிகள்!

Train
தீபாவளிக்காக ரயிலில் செல்வதற்கான முன்பதிவு இன்று தொடங்கப்பட்டு சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்த சம்பவம் பயணிகளை ஏமாற்றத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.



இந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி தீபாவளி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் ரயில்களுக்கான முன்பதிவை சில மாதங்கள் முன்னதாகவே ரயில்வே துறை தொடங்கி விடுகிறது.

அவ்வாறாக நவம்பர் 9ம் தேதி பயணிப்பதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. முன்பதிவு செய்வதற்காக பல ரயில் நிலையங்களில் காத்திருந்த பயணிகளுக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நவம்பர் 10ம் தேதி பயணிப்பதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இன்றும் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களுக்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளது.

தென் தமிழகம் நோக்கி செல்லும் நெல்லை விரைவு ரயில், பாண்டியன் எக்ஸ்பிரஸ் போன்றவை முழுவதுமாக நிரம்பியுள்ளன. இதனால் மேலும் சில சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முன்வர வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

Edit by Prasanth.K