1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Vajpayee final tribute held in delhi

வாஜ்பாய்க்கு நாளை மாலை 5 மணிக்கு இறுதிச்சடங்கு...

Vaypayee
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நாளை மாலை டெல்லியில் நடக்கவுள்ளது.

 
கடந்த ஜூன் 11 ஆம் தேதி வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை முதல் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பல்வேறு தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வந்தனர்.  பாஜகவும் அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்தது. 
 
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் 5.05 மணிக்கு அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை செய்தி வெளியிட்டுள்ளது. இவரது மறைவிற்கு பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலயில், வாஜ்பாயின் உடல் தற்போது அவரின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது. அவரின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட இருக்கிறது.
 
இவரின் இறுதி சடங்கு டெல்லி விஜய்காட் பகுதியில் நாளை மாலை 5 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், டெல்லி விஜய்காட் பகுதியில் வாஜ்பாய்க்கு ஒன்றரை ஏக்கரில் நினைவிடம் அமைக்கப்பட இருப்பதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்
பொக்ரான் நாயகன் வாஜ்பாய்: 30 ஆண்டு கால அணு ஆராய்ச்சி தடை முறியடிப்பு!